×

தென்காசியில் ஸ்கேட்டிங் மூலம் 12 கி.மீ. கடந்து 4 வயது சிறுவன் புதிய சாதனை

 

தென்காசி,பிப்.5: தென்காசியில் 12 கி.மீ. தொலைவை தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து 4 வயது மாணவர் புதிய சாதனை முயற்சி மேற்கொண்டார். தென்காசியை சேர்ந்த கார்த்திக் – கார்த்திகா தம்பதியரின் 4 வயது மகன் மகாதேவ் யாதவ். இவர் 12 கி.மீ. தொலைவிற்கு தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புதிய உலக சாதனை முயற்சிக்காக குத்துக்கல்வலசையில் இருந்து கணக்கப்பிள்ளைவலசை வழியாக பண்பொழி வரைக்கு சென்று மீண்டும் பண்பொழியில் இருந்து குத்துக்கல்வலசை வரை வந்து மீண்டும் குத்துக்கல் வலசையில் இருந்து புறப்பட்டு கணக்கப்பிள்ளை வலசையில் 12 கி.மீ. தொலைவை 42 நிமிடம் 44 நொடிகளில் நிறைவடைந்தார்.

முன்னதாக புதிய சாதனை முயற்சியை சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஏஎஸ்ஏ வித்யா நிகேதன் பள்ளியின் நிர்வாக அதிகாரி சுதா வரவேற்றார். தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் சேர்மன் புதிய பாஸ்கர், ஏஎஸ்ஏ பள்ளியின் தாளாளர் கல்யாணி, நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், இலத்தூர் எஸ்ஐ தாமரைலிங்கம், குங்பூ பயிற்சியாளர் ராம்ராஜ், ரங்கநாதன், கவுன்சிலர் சுனிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்யராஜ் நன்றி கூறினார். ஏற்கனவே சங்கரன்கோவிலைச் சேர்ந்த அஜய் என்ற 4 வயது மாணவர் 7 கி.மீ. தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார். அதனை மகாதேவ் முறியடித்து 12 கி.மீ. தூரம் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தென்காசியில் ஸ்கேட்டிங் மூலம் 12 கி.மீ. கடந்து 4 வயது சிறுவன் புதிய சாதனை appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Mahadev Yadav ,Karthik-Kartika ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...